Posts

Showing posts from October, 2021

Saints Today

Gd Mng  Saints are the signposts,  indicating different ways of living our life in a meaningful way.  Their Spirituality,  principled life and tenacity to face the challenges are the elements to be imitated.  Wishing you a Marvellous Monday  காலை வணக்கம்.  புனிதர்கள் ...ஆம்.. அவர்கள் பொருள் பொதிந்த வாழ்வை  சுட்டிக் காண்பிக்கும் திசைகாட்டிகள்.  தடங்களைப் பதித்து, தடுமாற்றம் அடையாமல், நிலைவாழ்வு பெறுவதற்காய், 'இப்படித்தான்' என்று கோடிட்டு, வாழ்வின் வரைபடத்தை தருகின்றவர்கள்.  அவர்களின் ஆன்மீகம், கொள்கைப் பிடிப்புள்ள வாழ்வு, மற்றும்  சவால்களை சந்திக்கும் மனத்திடன்   இவற்றை நாம் கற்றுக் கொள்வோம்.   வரும் நாட்களில் வசந்தமாய் இருக்க வாழ்த்துக்கள்.

Humility and Divinity

Gd Mng Where there is humility, you will realise the Divinity.  Be humble or else you will tumble.  காலை வணக்கம்  எங்கு தாழ்ச்சி இருக்கிறதோ அங்கு தெய்வீகம் புலப்படும் .  தாழ்ச்சி இல்லையெனில் தடுமாற்றம் ஏற்படும். இந்த நாள் நன்றியின் நாள்.

Flexibility and Creativity

Gd Mng Flexibility and practicality  are the elements of openness for new perspectives of growth. Enjoy the rains காலை வணக்கம்.  நடைமுறை சிந்தனையும் நெகிழ்வு மனப்பான்மையும் மேம்படுதலுக்கான  திறந்த  சிந்தனையின் கூறுகள் தான்.  அவை தாழ்வு மனப்பான்மையின் கூறுகள் அல்ல. மழைத்துளிகளை ரசிப்போம்.

Narrow Road to travel

Gd Mng Narrow passages  create  discomfort for your travel but offers more lessons for your life journey.  Challenging day  காலை வணக்கம்.  குறுகிய பாதை பயணத்தில் சங்கடங்களை ஏற்படுத்தும் ... ஆனால் வாழ்வுக்கு தேவையான பாடங்களை சொல்லிக் கொடுக்கும்.  இன்றைய நாள்  சவால்களைச் சந்திப்பதற்கு திறன் கொடுக்கட்டும்.

where is humanism?

காலை வணக்கம். மரம் என்றால் கனி, மலர் என்றால் மணம், நாய் என்றால் நன்றி, பறவை என்றால் தோழமை.... ஆனால் மானுடத்திற்கு மட்டும் மனிதம் என்ற அடைமொழி நிலைத்து நிற்க மறுக்கிறது... ஏன் இந்த சோகம்? இந்த நாள் புதிய நாள். Gd Mng. Tree reminds fruits, flower for fragrance,  dog for gratitude, birds for companionship but why humans  alone not able to retain the adjective of humanism permanently? Wishing you a new day.

Gift to God

Gd Mng Doing good to others in whatever way you can, is your offering to God. Gd day

God's Providence

Gd Mng. Vulnerability in our life becomes the best  of turning points and realising the power of God.  Humans may desert us but God's providence is always with us. Good day  காலை வணக்கம்.  வாழ்வில் வருகின்ற வலுவின்மை சூழல்கள் தான் மிகச்சிறந்த திருப்புமுனைகள்.  அவைகளில் தான் இறைவனின் பாதுகாப்பை உணரமுடியும்.  மானுடம் நம்மை ஏமாற்றினாலும் இறைவனின் திருக்கரம் நம்மோடு என்றும் இருக்கும்.  இந்த நாள் இனிய நாள்

Winners and Losers

காலை வணக்கம்.  வெற்றியாளருக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் கண்களில் தெரிகிறது.  சோம்பேறிகளுக்கு  தோல்வியை நியாயப்படுத்துவதற்காக காரணங்கள் தென்படுகிறது.  ஒவ்வொரு நாள் செயலும் நம்மை வெளிப்படுத்துகிறது  இனிய ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள். Gd mng  Winners look for the opportunities to face the  challenges whereas the losers find excuses for their failures.  Everyday acts reveal our identities.  Wishing you a relaxing Sunday.

Living with Principles

Gd Mng Principled Man and Woman will face trials and tribulations.  But the Spirit of God will be with him or her to defend  and speak.  Only thing is that we must have the habit of listening to the inner voice through our conscience.  Happy day  காலை வணக்கம்.  கொள்கைப் பிடிப்பு உள்ள ஒரு மனிதன் சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.  அந்த நேரத்தில் எதைப் பேசுவது எப்படி சந்திப்பது என்பதற்கான வல்லமையை இறை ஆவி நமக்காய் கொடுக்க காத்திருக்கிறது.  நமக்கு தேவை உள்ளிருந்து பேசுகின்ற இறை ஆவியின் குரலுக்கு  செவி மடுப்பதுதான். இந்த நாள் இனிய நாள்

Statues

காலை வணக்கம்  முச்சந்திகளில் மௌனமாய் நிற்கும் சிலைகள்.... மாலைகளின் மரியாதைகளுக்கு மட்டும் தானா?  இல்லை.... மௌனமாய்  அவைகள் சொல்லிக்கொண்டிருக்கும் கடந்தகால வரலாற்றுக்கும் நாம் செவிமடுக்க வேண்டும் . நிமிர்ந்த, உயர்ந்த எண்ணங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த நாள் இனிய நாள். Gd Mng. Statues are not merely for respects of garlands but also to recollect those Life-affirming values and events. New thinking must continue to be designed.  Great day.

Inner Attitude than External Behaviour

Gd Mng. Behaviours for the sake of visibility, publicity, attention and impression are the  symptoms of defective and incomplete personality.  True person denounces the external and seeks the inner attitude. Great day.  காலை வணக்கம் மற்றவர் முன்னிலையில் தன்னை  நல்லவராக நன்கொடையாளர்  ஆக  ஆன்மீக அழுத்தம் கொண்டவராக வெளிப்படுத்த முயற்சிப்பது பழுதுபட்ட குறைவான ஆளுமையின் வெளிப்பாடு.  நல்லவர் ஒருவர் அகத்தை உற்றுநோக்கி புறத்தை மறந்து விடுவார்.  புறம் மறந்து அகம் நோக்குவோம் . இந்த நாள் இனிய நாள்

Who is the Winner?

காலை வணக்கம்.  வெற்றியாளர்கள் போராட்டக் களத்தில் இருந்து வெளியேறுவதில்லை. போராட்டக் களத்தில் இருந்து வெளியேறியவர்கள் வெற்றி பெறுவதில்லை. வருகின்ற நாட்கள் சிறந்த நாட்களாக அமையட்டும். Gd Mng  Winners never quit; Quitters never win. Have a successful week ahead.

Holding the Invisible

காலை வணக்கம்.  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு  இந்த நாள் இனிய நாள் Gd Mng Hold firm the hands of the Invisible which will ensure the peace and happiness; do away with creedinss.  Happy Sunday

Person of Great Thoughts

காலை வணக்கம்.  கல்லெறி படுகின்ற மரம்  கனிகளை தாங்கி இருக்கும்.  நல்லெண்ணம் கொண்டவர்கள் நிச்சயமாய் தீயோரின் வசவு களுக்கு உள்ளாவார்கள்.  அவற்றிற்கெல்லாம் காலம் ஒருநாள் பதில் சொல்லும்.  இந்த நாள் இனிய நாள். The tree that bears fruits will be stoned; The person of good thoughts and integrity too would be criticised by the jealousy.  But the good will succeed in the future.  Gd day.

Mother, the Traveller

காலை வணக்கம்  தாயின் மடிதான் உலகம் அவள் தாளைப் பணிந்திடுவோம்.  அவளின்றி நான் இல்லை. அவளின்றி நீ இல்லை. அவளுக்காய்  இறைவனிடத்தில் நன்றி சொல்வோம்.  இந்த நாள் இனிய நாள்.

I am Growing

காலை வணக்கம்.   என் குற்றங்களை நான்   ஏற்றுக் கொள்ளும் பொழுது  நான் வளர்வதற்கு தயாராகிவிட்டேன்.  இன்றைய நாள் இனிய நாள் Gd Mng.  The moment I am ready to accept my mistakes,  I am growing.  Happy day

Family

குடும்பம் ஒரு அதிசயம்...  பெற்றெடுக்கும் தாய் ஓர் அதிசயம்... வளர்த்தெடுக்கும் தந்தை ஓர் அதிசயம்....  சமூக உறவுகளை  சுட்டி காண்பிக்கும் அக்கா தங்கை அண்ணன் தம்பி ஓர் அதிசயம் ... என்னோடு கனவில் பயணிக்கும் என் நண்பன் ஓர் அதிசயம் ....  பருவமெய்திய பின் வாழ்வு தொடங்குகின்ற போது என்னோடு பயணம் செய்ய காத்திருக்கும் மனைவி / கணவன் ஓர் அதிசயம் ... எனக்கு வாரிசாக பிறக்கும் குழந்தை ஒரு அதிசயம்...  இறுதியிலே நாகரீக வளர்ச்சியை சுட்டிக் காண்பிக்கும் என் பேரனும் பேத்தியும் ஓர் அதிசயம்....  ஒட்டுமொத்தமாக குடும்பம் ஒரு மிகப்பெரிய அதிசயப் பெட்டகம்  நன்றி சொல்லுவோம் கடவுளுக்கு... இன்றைய நாள் நல்லதொரு நாளாக அமையட்டும்.

The Wonder of Family

Gd Mng....The wonders of the world are all man-made material structures but the real , lively,vibrant, and Life-affirming wonders are in our family. Yes....The family has seven wonders: Mother who delivers me to the world,  Father who brings me up amidst challenges,  Siblings who teach me the socialization process, Friends who accompanies me in my dreams,  Wife or Husband who walks with me in my joys and sorrows, the child that becomes my heir, and the grandson or granddaughter who indicates the changes of next civilization. This bond of love and sacrifices is the real wonder given by God....Thank God for this living wonder, the Family.  Happy Sunday.  காலை வணக்கம்.  உலகின் பார்வையில் ஏழு அதிசயங்கள்.  அவை மண்ணால், கற்களால், உருவாக்கப்பட்ட அமைப்புக்கள்.  ஆனால் இறைவனின் பார்வையில் ஒரே ஒரு அதிசயம்.... அதுதான் உயிரோடு இருக்கக்கூடியது , துடிப்பானது, வாழ்வை இயக்குவது.... அதுதான் நமது குடும்பம் என்னும் அதிசயம் . அன்பு , தியாகம் என்னும் நரம்புகளால் பின்னப...

Being Connected

காலை வணக்கம்.  இறைவனின் படைப்புக்கள்....  மனிதனாக இருக்கட்டும்; தாவரங்கள் ஆக இருக்கட்டும்; விலங்குகளாக இருக்கட்டும்;  இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்து இருக்கிறது...  சார்ந்து வாழ்வது, இணக்கமாக இருப்பது, கூட்டு வாழ்விலே உதவி புரிவதும் தான் பிறப்பின் இலக்கு... வாழ்வின் வெற்றி.  இந்த நாள் இனிய நாள் Gd Mng. All the creations are interdependent and interconnected.  Happiness emerges only when we connect with others without any barriers....Great day.