Posts

Showing posts from April, 2022

Little men and Ordinary words

சுட்டெரிக்கும் சூரியனும் கொட்டும் மழையும் ஒற்றைக்குடையில்  மரணம்... வண்டியின்  சக்கரங்கள் அச்சாணி இரண்டில் அடைக்கலம்... சிறிது தானே? சின்னவர் தானே? என்று சிறுமைப்படுத்த வேண்டாம். சின்ன வார்த்தையும்  சிறியவர் செயலும்  அரிய வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும். இந்த நாள் நமக்காக.

தனித்துவம்

காலை வணக்கம். நூற்றோடு நூற்றோன்றாக இருப்பது எளிது... நூற்றிலே ஒருவனாக வாழ்வது கடினம். இந்த நாள் நமக்காக.

மெய்யும் பொய்யும்

காலை  வணக்கம்  செவிவழிச் செய்திகளை  பகுத்தறிவுச் சூளையில் புடமிட்டால்  அதன்  பொய்மையின் பரப்பையும் மெய்மையின் ஆழத்தையும்   நேரம் மற்றும் சூழல் வரையறைக்குள்  தெளிவுபடுத்தும். இந்த நாள் நமக்காக.

மூத்தோர் சொல் கேள்

காலை வணக்கம். மண்ணுக்கடியில் விரவிக்கிடக்கும் விழுதுகளே விருட்சங்களைத் தாங்கமுடியும்... முட்டி மோதும் ஆணிவேரின் வழித்தடத்தை சல்லி வேர்கள் தனதாக்க வேண்டும். வேர்களின் கசப்பினை உள்வாங்க வேண்டும் பச்சை ஓலைகள் நிமிர்ந்து நிற்கலாம்... ஆனால்  பழுத்த ஓலைகள் மட்டுமே தென்றலையும் சூறைக்காற்றையும் பிரித்துச் சொல்ல முடியும். குழவிகள் செழித்து வளரலாம்... ஆனால்  கிழவிகள் மட்டுமே வாழ்வின் சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுக்க முடியும் ஆம்.... முதுமைக்கு முன் இளமை மண்டியிட்டால்  வாழ்வு களைகட்டும்... இனிமையும் பொருண்மையும் ஒட்டிக்கொள்ளும். அனுபவமே ஆசான்... மூத்தோர் ஒரு பொக்கிஷம். இந்த நாள் நமக்காக.

சின்ன ஆசை

காலை வணக்கம் சின்னம் சிறு ஆசைகளை  சிறகடிக்க வைத்துவிட்டால் பெரும் விளைவுகள் நமக்காய் காத்திருக்கும். சிறு முள் தானே என்று விட்டால் அது பெரும் பயணத்தை தடுத்து விடும். ஆசைகள் தடுமாற்றத்தையும்  பிறழ்சிந்தனையும் ஏற்படுத்தும்... கவனமாய் இருப்போம். இந்த நாள் நமக்காக.