மூத்தோர் சொல் கேள்
காலை வணக்கம்.
மண்ணுக்கடியில் விரவிக்கிடக்கும்
விழுதுகளே விருட்சங்களைத் தாங்கமுடியும்...
முட்டி மோதும்
ஆணிவேரின் வழித்தடத்தை
சல்லி வேர்கள்
தனதாக்க வேண்டும்.
வேர்களின் கசப்பினை உள்வாங்க வேண்டும்
பச்சை ஓலைகள் நிமிர்ந்து நிற்கலாம்...
ஆனால் பழுத்த ஓலைகள் மட்டுமே தென்றலையும் சூறைக்காற்றையும்
பிரித்துச் சொல்ல முடியும்.
குழவிகள் செழித்து வளரலாம்...
ஆனால்
கிழவிகள் மட்டுமே வாழ்வின் சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுக்க முடியும்
ஆம்.... முதுமைக்கு முன் இளமை மண்டியிட்டால் வாழ்வு களைகட்டும்... இனிமையும்
பொருண்மையும்
ஒட்டிக்கொள்ளும்.
அனுபவமே ஆசான்... மூத்தோர் ஒரு பொக்கிஷம்.
இந்த நாள் நமக்காக.
Comments
Post a Comment