Posts

Showing posts from May, 2022

உண்மை

காலை வணக்கம். உண்மையை நீ சொல்லுகிற பொழுது  உன்னை நோக்கி வரும் ஊனப்படுத்தும் வார்த்தைகளை உள் வாங்காதே... ஏனெனில்  பொய்மை பேசுகிறவரை உண்மை குத்திக் கொண்டே இருக்கும். இந்த நாள் நமக்காக.

சவால்கள்

காலை வணக்கம். நீ சுமக்கும் சுமைகள் ஒரு மானுடத்திற்காக என்றால் எதிர் வரும் சவால்களை கண்டு கொள்ளாதே.... ஏனெனில் நீ  கட்டுவிக்கும் புதிய மானுடம் அதை எதிர்கொள்ளும். இந்த நாள் நமக்காக.

வாய்ப்புக்கள்

*விலைமதிப்பற்ற வாய்ப்புகளை இழக்கலாமா?*                                                                                           பிச்சைக்காரன் ஒருவன் வழியில் ஒரு  விலை உயர்ந்த வைரத்தை கண்டெடுத்தான். அது என்ன கல் என்றும்  அதன் மதிப்பு எவ்வளவு என்பதும் தெரியாமலேயே  அதன் மதிப்பு தெரியாததால் அந்த பிச்சைக்காரன்  அந்த கல்லை  தன்னுடன் இருந்த நாயின்  கழுத்தில் கட்டிவிட்டான். அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு  வியாபாரி அந்த கல் வைரக்கல் என்பதை அறிந்து  அதனை பிச்சைகாரனிடமிருந்து  வாங்கிக்கொள்ள நினைத்தான்.  எனவே அந்த வியாபாரி  பிச்சைகாரனிடம்  ” நீ அந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நீ கேட்கும் பணத்தை  நான் உனக்கு  தருகிறேன் என்றான் . எவ்வளவு வேண்டும் கேள் ” என்றும் கேட்டான் . உடனே பிச்சைக்காரன் சரி “ அப்படியா...

ஆசையும் தேவையும்

காலை வணக்கம். ஆசைகளையும் தேவைகளையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்துவிட்டாலே வாழ்வின் பயணம் இனித்து விடும். இந்த நாள் நமக்காக.

சமயோசித புத்தி

காலை வணக்கம். சமயோசிதப்புத்தி... அது சந்தர்ப்பவாதம் அல்ல...  சுயநலம் அல்ல... சுருங்கியச் சிந்தனை அல்ல...  தப்பிப்பதை இலகுவாக்கும் சிந்தனை அல்ல... மாறாக  எந்த நேரத்தில் எதைச் சொன்னால் எல்லோருக்கும் பயன் தரும்  என்ற அகன்ற, ஆழமான, சமத்துவச் சிந்தனை. இந்த நாள் நமக்காக.

Think good and Do good

காலை வணக்கம்.  எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நல்லது  செய்தால் நன்மையும் கூடிவரும். அல்லது சிந்தித்தால் தீயது பின்வரும். இந்த நாள் நமக்காக

துணிவு

காலை வணக்கம். புரண்டோடும் வெள்ளத்தில் தலை குனிந்து வளைந்து கிடந்தாலும் வேர்பிடித்து நிற்கும் செடி கொடிகள். வெள்ளம் வடிந்த பின் மீண்டும் நிமிர்ந்து  துளிர்த்து நிற்க்கும்.  அந்த ஒரு நிமிடம் மனதில் துணிவு பிறந்துவிட்டால் எத்தனை வெள்ளமும் எதிர்நீச்சலுக்கு அடிபணிந்தே தீரும்.  நம்பிக்கையோடு நாட்களை நகர்த்தும்.  இந்த நாள் நமக்காக

உறவுகள்... முடிவுகள்

[11/05, 8:39 AM]   காலை வணக்கம். கருமேகம் திரண்டு வந்தால் பெருமழை நிச்சயம். தேனீக்கள் சுற்றிப் பறந்தால்  பூவினில் தேன் நிச்சயம். உறவுகள் கூடி நின்றால் ஈரமான இதயம் நிச்சயம். இந்த நாள் நமக்காக. ------ [12/05, 7:28 AM] .....:  காலை வணக்கம். ஆழமாய் உழுதால் பயிர்கள் வேர் பிடிக்கும். நீண்டு சிந்தித்தால் நெடும்பலன் தரும் முடிவு கிடைக்கும். இந்த நாள் நமக்காக.

எதிர்பார்ப்பு

காலை வணக்கம். எதிர்பார்ப்புகளோடு தொடங்கும் உறவுகள் நீடிக்க முடியாது. உறவுக்குப் பின் வருகின்ற எதிர்பார்ப்புக்கள் நியாயமானதாக இருக்கும். இந்த நாள் நமக்காக

தாய்மை

[07/05, 10:02 AM]   காலை வணக்கம். தொப்புள்கொடி அறுக்கப்பட்டாலும் அமுதூட்டிய மார்பகங்கள் சுருங்கி போனாலும்  தூக்கி வளர்த்த கரங்கள் துவண்டு போனாலும்  நடை சொல்லிக்கொடுத்த கால்கள் சோர்ந்து போனாலும்  இறுதிவரை  பெற்ற மக்களுக்காய் துடித்துக்கொண்டிருக்கும்  ஒரு இதயம் தான் தாய்மை. முகவரி அறியாவிடினும் பத்து மாதங்கள் சுமக்காவிட்டாலும் யாரோ ஒரு  பச்சிளம் குழந்தை தன் அருகில் வந்தால் உச்சிமுகர்ந்து முத்தம் கொடுப்பவள் தான் தாய். தாய்களுக்கு தாள் பணிந்து நன்றி சொல்வோம்.  இந்த நாள் நமக்காக [08/05, 10:50 AM  காலை வணக்கம். அய்விரல்கள் இணைந்தால் அரவணைப்பு கிடைக்கும். அது அன்பையும் ஆறுதலையும் ஆர்ப்பரிக்கும் சிந்தனையையும் அள்ளித் தரும். அத்துணையும் மொத்தமாய் கிடைப்பது அன்னையின் கரங்களில் தான். அன்னையர்களுக்கு கரம் குவிப்போம். இந்த நாள் நமக்காக.

அம்மா

காலை வணக்கம். தொப்புள்கொடி அறுக்கப்பட்டாலும் அமுதூட்டிய மார்பகங்கள் சுருங்கி போனாலும்  தூக்கி வளர்த்த கரங்கள் துவண்டு போனாலும்  நடை சொல்லிக்கொடுத்த கால்கள் சோர்ந்து போனாலும்  இறுதிவரை  பெற்ற மக்களுக்காய் துடித்துக்கொண்டிருக்கும்  ஒரு இதயம் தான் தாய்மை. முகவரி அறியாவிடினும் பத்து மாதங்கள் சுமக்காவிட்டாலும் யாரோ ஒரு  பச்சிளம் குழந்தை தன் அருகில் வந்தால் உச்சிமுகர்ந்து முத்தம் கொடுப்பவள் தான் தாய். தாய்களுக்கு தாள் பணிந்து நன்றி சொல்வோம்.  இந்த நாள் நமக்காக

வண்ணங்கள்

[24/04, 7:34 AM] .....:  காலை வணக்கம். தூரிகை பிடிக்கும் ஓவியனுக்கு தூரதேசத்து இயற்கையும் உள்மனத்தூளியில் மௌனமாய் இடம்பிடிக்கும். முயல் தேடும்  வேடுவனுக்கு முட்புதரின் சிறு அசைவும்  பெருஉவகை பிறப்பிக்கும். கருவறையில்  துள்ளும்வகை தாய் மனதில் எதிர்பார்ப்பை கிளப்பிவிடும். எதிர்பார்ப்புகள் பார்வைகளையும் பதிவுகளையும் கூர்மையாக்கும். தேடுதலை  விரைவாக்கும். நமக்கு என்ன...எதற்கான.....எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு??? இந்த நாள் நமக்காக. [24/04, 7:36 AM]   காலை வணக்கம். தூரிகை பிடிக்கும் ஓவியனுக்கு தூரதேசத்து இயற்கையும் உள்மனத்தூளியில் மௌனமாய் இடம்பிடிக்கும். முயல் தேடும்  வேடுவனுக்கு முட்புதரின் சிறு அசைவும்  பெருஉவகை பிறப்பிக்கும். கருவறையில்  துள்ளும்வகை தாய் மனதில் எதிர்பார்ப்பை கிளப்பிவிடும். எதிர்பார்ப்புகள் பார்வைகளையும் பதிவுகளையும் கூர்மையாக்கும். தேடுதலை  விரைவாக்கும். நமக்கு என்ன...எதற்கான.....எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு??? இந்த நாள் நமக்காக. [25/04, 9:45 AM]   காலை வணக்கம். கிழமையும் தேதியும்  திங்களுக்கு உண்டு. நேரமும்...