தாய்மை
[07/05, 10:02 AM]
காலை வணக்கம்.
தொப்புள்கொடி அறுக்கப்பட்டாலும் அமுதூட்டிய மார்பகங்கள் சுருங்கி போனாலும்
தூக்கி வளர்த்த கரங்கள் துவண்டு போனாலும்
நடை சொல்லிக்கொடுத்த கால்கள் சோர்ந்து போனாலும்
இறுதிவரை
பெற்ற மக்களுக்காய் துடித்துக்கொண்டிருக்கும்
ஒரு இதயம் தான் தாய்மை.
முகவரி அறியாவிடினும்
பத்து மாதங்கள் சுமக்காவிட்டாலும் யாரோ ஒரு பச்சிளம் குழந்தை தன் அருகில் வந்தால் உச்சிமுகர்ந்து முத்தம் கொடுப்பவள் தான் தாய்.
தாய்களுக்கு
தாள் பணிந்து நன்றி சொல்வோம்.
இந்த நாள் நமக்காக
[08/05, 10:50 AM
காலை வணக்கம்.
அய்விரல்கள்
இணைந்தால்
அரவணைப்பு கிடைக்கும்.
அது அன்பையும்
ஆறுதலையும்
ஆர்ப்பரிக்கும்
சிந்தனையையும்
அள்ளித் தரும்.
அத்துணையும்
மொத்தமாய்
கிடைப்பது
அன்னையின்
கரங்களில் தான்.
அன்னையர்களுக்கு கரம் குவிப்போம்.
இந்த நாள் நமக்காக.
Comments
Post a Comment