வாய்ப்புக்கள்
*விலைமதிப்பற்ற வாய்ப்புகளை இழக்கலாமா?*
பிச்சைக்காரன் ஒருவன் வழியில் ஒரு விலை உயர்ந்த வைரத்தை கண்டெடுத்தான். அது என்ன கல் என்றும் அதன் மதிப்பு எவ்வளவு என்பதும் தெரியாமலேயே அதன் மதிப்பு தெரியாததால் அந்த பிச்சைக்காரன் அந்த கல்லை தன்னுடன் இருந்த நாயின் கழுத்தில் கட்டிவிட்டான்.
அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வியாபாரி அந்த கல் வைரக்கல் என்பதை அறிந்து அதனை பிச்சைகாரனிடமிருந்து வாங்கிக்கொள்ள நினைத்தான். எனவே அந்த வியாபாரி பிச்சைகாரனிடம் ” நீ அந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நீ கேட்கும் பணத்தை நான் உனக்கு தருகிறேன் என்றான் . எவ்வளவு வேண்டும் கேள் ” என்றும் கேட்டான் .
உடனே பிச்சைக்காரன் சரி “ அப்படியானால் ஒரு பத்து ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக்கல்லை எடுத்துக்கொள் ” என்றான்.
அதற்கு அந்த வியாபாரியோ பிச்சைகாரனுக்கு வழியில் கிடைததுதானே எனவே மேலும் விலையை குறைத்து வாங்க வேண்டும் என்ற எண்ணி” பத்து ரூபாய் அதிகம்! நான் உனக்கு 5 ரூபாய் தருகிறேன் என்றான் அப்படி நீ 5 ரூபாய்க்கு தர முடியாவிட்டால் எனக்கு அந்தக் கல்வேண்டாம் என்றான்
( எப்படியும் தான் கேட்ட விலைக்கு பிச்சைக்காரன் தந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் )கல்லின் மதிப்பு பிச்சைகாரனுக்கு எங்கே தெரியப்போகிறது என்ற நினைப்பிலும் காத்திருந்தான்
அதனை கேட்ட அந்த “பிச்சைக்காரனோ“.நான் கேட்ட விலை கொடுக்காவிட்டால்
பரவாயில்லை அந்தக் கல் நாயின் கழுத்திதிலேயே இருந்துவிட்டுபோகட்டும் ” என்று சொல்லிக்கொண்டே நடக்கலானான்.
ஆனால் வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அந்தக் கல்லை தான் கேட்ட விலைக்கே பிச்சைகாரன் தந்துவிடுவான் என்ற எண்ணிக் காத்திருந்தான்.
அதற்குள் அவ்வழியேவந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் கொடுத்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.
இதை சற்றும் எதிர்பாராத முதல் வியாபாரி அதிர்ச்சியுடன் பிச்சைக்காரனைப்பார்த்து “ அட அடிமுட்டாளே! பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரம் ருபாய்க்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக போகிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாயே “ என்றான்.
அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்..?, நீ தான் முட்டாள் எனக்கு அந்த கல்லின் மதிப்புத் தெரியாது அதனால் அதை கிடைத்த விலைக்கு விற்றுவிட்டேன்.
மேலும் இதுவே எனக்கு மிகப் பெரிய தொகை அந்த கல்லை 1000 ரூபாய்க்கு விற்றதில் எனக்கு வருத்தமில்லை நான் மிகுந்த சந்தோஷத்துடன் தான் இருக்கிறேன். அதன் மதிப்புத்தெரிந்த நீ வெறும் 5 ரூபாயிற்காக அந்தக் கல்லை நீ தான் கோட்டை விட்டாய் நீதான் வருத்தப்படவேண்டும் நீதான் முட்டாள் என்றான் “ அதனால் நீ தான் உன் சந்தோஷத்தையும் இழந்தாய் என்று சொல்லி கொண்டே நடக்கலானான்.
பல நேரங்களில் இப்படித்தான் மற்றவர்களின் அறியாமையை நமக்கு சாதகமாக்கி கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு பல விஷயங்கலில் நமது வாய்ப்பை, சந்தோஷத்தை கோட்டைவிடுகிறோம்.
Comments
Post a Comment