வண்ணங்கள்

[24/04, 7:34 AM] .....: 
காலை வணக்கம்.

தூரிகை பிடிக்கும்
ஓவியனுக்கு
தூரதேசத்து இயற்கையும்
உள்மனத்தூளியில்
மௌனமாய்
இடம்பிடிக்கும்.

முயல் தேடும் 
வேடுவனுக்கு
முட்புதரின்
சிறு அசைவும் 
பெருஉவகை
பிறப்பிக்கும்.

கருவறையில் 
துள்ளும்வகை
தாய் மனதில்
எதிர்பார்ப்பை
கிளப்பிவிடும்.

எதிர்பார்ப்புகள்
பார்வைகளையும்
பதிவுகளையும்
கூர்மையாக்கும்.
தேடுதலை 
விரைவாக்கும்.

நமக்கு என்ன...எதற்கான.....எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு???

இந்த நாள் நமக்காக.


[24/04, 7:36 AM] 
 காலை வணக்கம்.

தூரிகை பிடிக்கும்
ஓவியனுக்கு
தூரதேசத்து இயற்கையும்
உள்மனத்தூளியில்
மௌனமாய்
இடம்பிடிக்கும்.

முயல் தேடும் 
வேடுவனுக்கு
முட்புதரின்
சிறு அசைவும் 
பெருஉவகை
பிறப்பிக்கும்.

கருவறையில் 
துள்ளும்வகை
தாய் மனதில்
எதிர்பார்ப்பை
கிளப்பிவிடும்.

எதிர்பார்ப்புகள்
பார்வைகளையும்
பதிவுகளையும்
கூர்மையாக்கும்.
தேடுதலை 
விரைவாக்கும்.

நமக்கு என்ன...எதற்கான.....எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு???

இந்த நாள் நமக்காக.


[25/04, 9:45 AM] 
 காலை வணக்கம்.

கிழமையும் தேதியும் 
திங்களுக்கு உண்டு.

நேரமும் பொழுதும் நாட்களுக்கு உண்டு.

உணர்வும் உறவும்
மனிதனுக்கு உண்டு.

நினைந்து வாழ்வோம்
இணைந்து செல்வோம்.

இந்த நாள் நமக்காக.


[26/04, 8:06 AM] .....: 
காலை வணக்கம்.

விளக்கைச் சுற்றி பெரியவர் முதல் சிறியவர் வரை வட்டமாய் அமர்ந்து உண்ணும்போது

உறவை  மட்டுமல்ல உழைப்பையும் சுட்டுகிறோம்.

ஆம்... உழைப்பும் பொதுவுடமை... வருகின்ற உணவும் பொதுவுடமை. 

விளக்கின்
வட்டத்தில் 
குடும்ப உணவு???

இந்த நாள் நமக்காக.


[26/04, 8:08 AM] 
 காலை வணக்கம்.

விளக்கைச் சுற்றி பெரியவர் முதல் சிறியவர் வரை வட்டமாய் அமர்ந்து உண்ணும்போது

உறவை  மட்டுமல்ல உழைப்பையும் சுட்டுகிறோம்.

ஆம்... உழைப்பும் பொதுவுடமை... வருகின்ற உணவும் பொதுவுடமை. 

விளக்கின்
வட்டத்தில் 
குடும்ப உணவு???

இந்த நாள் நமக்காக.


[27/04, 8:53 AM] 
 காலை வணக்கம்.

வாழ்வில் திருப்புமுனை மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆனால் திருப்புமுனையை  அடையாளம் காண்பதில் தான் வாழ்வின் ரகசியம் இருக்கிறது.

 இந்த நாள் நமக்காக.


[28/04, 8:16 AM] 
 காலை வணக்கம்

ஆண்டுகளாய் இருட்டு அறைக்குள்
காத்திருக்கும் கண்களுக்கு
திடீரென ஒரு நாள் வெளிச்சம் பயத்தையும் ஐயத்தையும் தரும்.

நீண்ட நாள் பழக்கம், அச்சம் 
கலைந்து போக
நேரம் எடுக்கும்.

பொறுமையும் உந்துதலும் வேண்டும்... காத்திருப்போம்

கடின உள்ளமும் கனிந்துவிடும்... காத்திருப்போம்.

இந்த நாள் நமக்காக.


[29/04, 8:18 AM] 
 காலை வணக்கம்.

சறுக்கல்களைச்
சந்தித்தாலும் சமரசங்கள் செய்து விடாதே.

உண்மையான காரணம்  ஆய்ந்து  பூரண முயற்சி செய். அதுதான் வாழ்வுக்கு நீ கொடுக்கும் பரிசு.

இந்த நாள் நமக்காக.


[30/04, 8:14 AM]
 காலை வணக்கம். 

நலம் தரும் வாழ்வுக்கு 
வளமானச் சிந்தனைகளை
நாமே வடிவமைத்துக் 
கொண்டால் 

இறைவனின் தொடர் பிரசன்னம் 
நம்மோடு என்றும் இருக்கும் 
இந்த நாள் நமக்காக.


[02/05, 6:30 AM] .....: 
காலை வணக்கம்.

இருமுக மனிதர்கள்
இருளுக்குச் சமமே.

அகத்தில் சுருக்கம்
புறத்தில் புன்னகை...
இது நட்பை முறிக்கும் 
கொடிய விஷம்.

மனதில் பட்டதைச் சொல்வோர் பச்சை மரமே... மற்றோர் பட்ட மரமே.

இந்த நாள் நமக்காக.

Comments

Popular posts from this blog

புதினம்

Narrow Road to travel