காலை வணக்கம் ஒருவர் நினைக்கப் படுவது வண்ணவண்ண எண்ணங்களுக்கு சொந்தக்காரர் என்பதற்காக அல்ல... மாறாக வெண்மை எண்ணங்கள் அவரிடம் குடியிருந்தாலே போதும். இந்த நாள் இனிய நாள்
காலை வணக்கம் புதைந்து மண்ணைப் பிளந்து கிளைத்து பறவைகளுக்கு இல்லிடமாகும் விதைகள்... தொடர்ந்து விண்ணை நோக்கி வளரும் விருட்சங்கள்... வளர்ச்சியே வாழ்க்கை. இந்த நாள் இனிய நாள்.
காலை வணக்கம். தேகம் தொடும் தென்றலோ உடல் வருத்தும் கடும் வெயிலோ அனுபவிக்க வேண்டியது நான் தான்... சந்திக்க வேண்டியது நான் தான்... என் வாழ்க்கை... என் முடிவு. ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள் இந்த நாள் இனிய நாள்
காலை வணக்கம் சொகுசுகளின் கூடாரத்தில் வாழ்வின் இலக்கணம் மங்கியே கிடக்கும். வறுமையிலும் சவால்களிலும் தான் வாழ்வின் ரகசியம் வெளிச்சப்படும். இந்த நாள் இனிய நாள்.
காலை வணக்கம். ஒவ்வொருநாளும் ஒரு வகுப்பறை... அனுபவங்களின் கூடாரம். புதியவை கற்றுக்கொள்ள... பழமையை மெருகேற்ற... கழிவை வெளியேற்ற... எதிர் கொள்வோம் இந்த நாளை. இந்த நாள் இனிய நாள்.
பொங்கல் வணக்கம் உழைப்பின் கனிகளை இறைவனுக்கு கொடுத்து நன்றி சொல்லும் நாள் இது. உழைப்பின் ஊடாக பரந்து கிடக்கும் உறவுகளை நினைத்து நன்றி சொல்லும் நாள் இது. தமிழர் இனத்தை ஒன்று சேர்க்கும் நாள் இது. உழைப்போம்... உழைப்பால் உயர்வோம்... உயர்வினில் தமிழ் இனத்தை வளர்ப்போம். பொங்கல் விழா வாழ்த்துக்கள்.
காலை வணக்கம். வளைந்து கொடுப்பவர்கள் எல்லாம் வாழத் தெரிந்தவர்கள்... நிமிர்ந்து நின்றால் உலகம் தெரியாதவன்... இது உலகத்தின் பார்வை .... ஆனால் தெய்வீகத்தின் பார்வையோ எல்லா நேரங்களிலும் நேர் கோட்டில் சிந்திப்பதும் நடப்பதும். நேராக நிற்கும் ஆணிகள் மட்டுமே அறையப்பட்டு நம்பப்படும். நம்பகத் தன்மைக்கு முயற்சிப்போம். இந்த நாள் இனிய நாள்
காலை வணக்கம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது நேர்மையற்ற ஆளுமை என்பது மட்டுமல்ல... உண்மையான உறவுகளை உடைத்தெறியும் நச்சு மனிதர்கள். கவனமாக இருப்போம். இந்த நாள் இனிய நாள்
Gd Mng Supposing God appears today infront of you, what would be the words of God about you? Will it be the following: " Here I am pleased with my son / daughter ". Where am I? Have a blessed Sunday.
Dear....Wishing you a great and fruitful year 2022 with abundant blessings of God. Let this year make you strong and bold to meet the challenges; soften your hearts to reach the poor and alert to listen to the inner voice. Spread the hope to all whom you will be meeting in the days to come.
காலை வணக்கம். ஒவ்வொருவருக்கும் இரண்டு வாழ்க்கைகள் உண்டு... ஒன்று தாயின் வயிற்றிலிருந்து இப்பிரபஞ்சத்தை எட்டிப் பார்க்கிற பொழுது.... மற்றொன்று இந்த பூமியில் இந்த வாழ்க்கை ஒன்றுதான்... ஒரே பிறப்பு தான் என உணரும் பொழுது... அக ஒளி பெறுவோம் புதிய தடம் அமைப்போம். இந்த புத்தாண்டில் இரண்டாம் வாழ்க்கைக்காக முடிவு செய்வோம். இந்த நாள் இனிய நாள்.
காலை வணக்கம். கரையைத் தேடும் அலை கடலைத் தேடும் நதி தாயைத் தேடும் சேய் பூவைத் தேடும் வண்டு ஒளியைத் தேடும் கிளை மேகம் தேடும் மண்... மானுடம் மட்டும் மனிதம் தேட மறுப்பது ஏன்? கருவறை போல கல்லறையும் நிச்சயம் தான்... உண்மையும் உழைப்பும் படைத்தவன் முன் நேர் நிறுத்தும். புரிந்தார் வாழ்வின் பொருள் கொள்வர் இல்லையேல்???? இந்த நாள் இனிய நாள்
காலை வணக்கம். ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு. பொறுமையும் நேரமும் பொக்கிஷங்கள். எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும். இந்த நாள் இனிய நாள்.