மனிதம் தேட மறுப்பது ஏன்?
காலை வணக்கம்.
கரையைத் தேடும் அலை
கடலைத் தேடும் நதி
தாயைத் தேடும் சேய்
பூவைத் தேடும் வண்டு
ஒளியைத் தேடும் கிளை
மேகம் தேடும் மண்...
மானுடம் மட்டும் மனிதம் தேட மறுப்பது ஏன்?
கருவறை போல
கல்லறையும்
நிச்சயம் தான்...
உண்மையும்
உழைப்பும்
படைத்தவன் முன்
நேர் நிறுத்தும்.
புரிந்தார்
வாழ்வின்
பொருள் கொள்வர்
இல்லையேல்????
இந்த நாள்
இனிய நாள்
Comments
Post a Comment