Posts

Showing posts from June, 2022

மேகங்களாய் மானுடம்

காலை வணக்கம்  நீண்ட... நீல வானத்தில் திட்டுக்களாய் மேகங்கள்... சில கதிரவனை மறைத்து நிழல்தரும். இன்னும் சில மழை  தாங்கிய மடுக்களாய்... வேறு சில கண்ணுக்கு குளிர்ச்சி தரும்  வெண்மை பொம்மைகளாய்... எங்கிருப்பினும் மானுடத்தின் சிநேகிதத்தில் அந்த மேகங்கள். எங்கிருந்தாலும் நாமும் மானிடத் தோழமையை வளர்ப்போம்.  இந்த நாள் நமக்காக.

வாழ்வின் தரம்

காலை வணக்கம். இசையின் இனிமையை கம்பிகளின் முறுக்கேற்றம் முடிவுசெய்யும். வாழ்வின் தரம் ஏற்றத் தாழ்வுகளை  ஒருவர் சந்திப்பதைப் பொறுத்தது. இந்த நாள் நமக்காக.

அன்பின் பெருநாள்

காலை வணக்கம் அது உற்று நோக்கும்... நிறைவைச் சொல்லும் ஆனால் இடித்துரைக்கத் தயங்காது. சினம் கொள்ளும் ஆனால் சிதைத்து விடாது. தயங்கி நான் நின்றால் ஓடோடி வந்து உறவை உறுதிப்படுத்தும். அச்சம் மறந்திடு... ஆற்றல் உணர்ந்திடு... என்று அரவணைத்துச் செல்லும்... அதுதான் அன்பு. அன்பின் இதயப் பெருநாள் வாழ்த்துக்கள். இந்த நாள் நமக்காக.

பழக்கமும் முயற்சியும்

காலை வணக்கம்  முட்களுக்குப் பயந்து கனிகள் நிறைந்த முட்செடிகள் ஒதுக்கப்படுவதுண்டு. முட்கள் பாதுகாப்பிற்காகவே... அதன் கனிகள் சுவைக்கப்படுவதற்காகவே... புறத்தில் முரட்டு மனிதர்கள் அகத்தில் அன்பிற்கு அகப்படுவார்கள்... பழகிப் பார்த்தால் எல்லாம் புரியும். முயற்சி எடுத்தால் எல்லாம் முடியும். இந்த நாள் நமக்காக.

முட்செடிகளின் கனிகள்

காலை வணக்கம்  முட்களுக்குப் பயந்து கனிகள் நிறைந்த முட்செடிகள் ஒதுக்கப்படுவதுண்டு. முட்கள் பாதுகாப்பிற்காகவே... அதன் கனிகள் சுவைக்கப்படுவதற்காகவே... புறத்தில் முரட்டு மனிதர்கள் அகத்தில் அன்பிற்கு அகப்படுவார்கள்... பழகிப் பார்த்தால் எல்லாம் புரியும். இந்த நாள் நமக்காக.

நிரந்தரம்

காலை வணக்கம். அரிதாரங்களும் வண்ணங்களும் அழகு வார்த்தைகளும் தற்காலிகச் சுகங்களே. இயல்பான பேச்சும் முகமும் மட்டுமே என்றும் நிரந்தரம். இந்த நாள் நமக்காக.

Day of Hope

Gd mng  Let this day be a time of hope,  strength and new experiences. Remember, all the above depends on your perception.  This day is ours

நற்செயல் நற்சொல்

காலை வணக்கம். புல் முளைக்கும் காட்சி....அது பூமிக்கு பிறப்பிக்க வைக்கும் சக்திக்கு சாட்சி. நற்செயல் நற்சொல்...  அது மானுடத்தில் கடவுளின் பிரசன்னத்திற்கு சாட்சி... நல்லவனின் வாழ்வுக்கு மாட்சி. இந்த நாள் நமக்காக.

நிலையானது எது?

காலை வணக்கம். சமூகத்தில் உயர்ந்த நிலை பெற்று விடலாம். அது நிலையற்றது. உள்ளங்களில் உயர்ந்த நிலை பெறுவது தான்  கடினம். அதுவே நிலையானது. இந்த நாள் நமக்காக