மேகங்களாய் மானுடம்
காலை வணக்கம்
நீண்ட... நீல வானத்தில் திட்டுக்களாய் மேகங்கள்...
சில கதிரவனை மறைத்து நிழல்தரும்.
இன்னும் சில மழை தாங்கிய மடுக்களாய்...
வேறு சில
கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வெண்மை பொம்மைகளாய்...
எங்கிருப்பினும் மானுடத்தின் சிநேகிதத்தில் அந்த மேகங்கள்.
எங்கிருந்தாலும்
நாமும்
மானிடத் தோழமையை வளர்ப்போம்.
இந்த நாள் நமக்காக.
Comments
Post a Comment