Posts

ஆசைப்படு

காலை வணக்கம்  தேவையானவற்றுக்கு ஆசைப்படு. ஆசைப்பட்டதை எல்லாம் தேவையாக மாற்றாதே.  இந்த நாள் நமக்காக.

முயற்சி

காலை வணக்கம்  அடி எடுத்து  வைத்த பின்  ஆலோசனை செய்யாதே... முயற்சிக்கு மெருகூட்டு...  சவால்களைச் சிந்திக்க தோள்களுக்கும் மனதிற்கும் வலுவூட்டு...  நிச்சயமாய் வெற்றி உனதாகும். இந்த நாள் நமக்காக

மேகங்களாய் மானுடம்

காலை வணக்கம்  நீண்ட... நீல வானத்தில் திட்டுக்களாய் மேகங்கள்... சில கதிரவனை மறைத்து நிழல்தரும். இன்னும் சில மழை  தாங்கிய மடுக்களாய்... வேறு சில கண்ணுக்கு குளிர்ச்சி தரும்  வெண்மை பொம்மைகளாய்... எங்கிருப்பினும் மானுடத்தின் சிநேகிதத்தில் அந்த மேகங்கள். எங்கிருந்தாலும் நாமும் மானிடத் தோழமையை வளர்ப்போம்.  இந்த நாள் நமக்காக.

வாழ்வின் தரம்

காலை வணக்கம். இசையின் இனிமையை கம்பிகளின் முறுக்கேற்றம் முடிவுசெய்யும். வாழ்வின் தரம் ஏற்றத் தாழ்வுகளை  ஒருவர் சந்திப்பதைப் பொறுத்தது. இந்த நாள் நமக்காக.

அன்பின் பெருநாள்

காலை வணக்கம் அது உற்று நோக்கும்... நிறைவைச் சொல்லும் ஆனால் இடித்துரைக்கத் தயங்காது. சினம் கொள்ளும் ஆனால் சிதைத்து விடாது. தயங்கி நான் நின்றால் ஓடோடி வந்து உறவை உறுதிப்படுத்தும். அச்சம் மறந்திடு... ஆற்றல் உணர்ந்திடு... என்று அரவணைத்துச் செல்லும்... அதுதான் அன்பு. அன்பின் இதயப் பெருநாள் வாழ்த்துக்கள். இந்த நாள் நமக்காக.

பழக்கமும் முயற்சியும்

காலை வணக்கம்  முட்களுக்குப் பயந்து கனிகள் நிறைந்த முட்செடிகள் ஒதுக்கப்படுவதுண்டு. முட்கள் பாதுகாப்பிற்காகவே... அதன் கனிகள் சுவைக்கப்படுவதற்காகவே... புறத்தில் முரட்டு மனிதர்கள் அகத்தில் அன்பிற்கு அகப்படுவார்கள்... பழகிப் பார்த்தால் எல்லாம் புரியும். முயற்சி எடுத்தால் எல்லாம் முடியும். இந்த நாள் நமக்காக.

முட்செடிகளின் கனிகள்

காலை வணக்கம்  முட்களுக்குப் பயந்து கனிகள் நிறைந்த முட்செடிகள் ஒதுக்கப்படுவதுண்டு. முட்கள் பாதுகாப்பிற்காகவே... அதன் கனிகள் சுவைக்கப்படுவதற்காகவே... புறத்தில் முரட்டு மனிதர்கள் அகத்தில் அன்பிற்கு அகப்படுவார்கள்... பழகிப் பார்த்தால் எல்லாம் புரியும். இந்த நாள் நமக்காக.