அசை போடுவோம்
காலை வணக்கம்.
கல்லோ... முள்ளோ...
மனம் நினைக்கும் திசையில் பாதங்களின் பயணம்.
இளஞ்செடியோ...
பெரு மரமோ...
ஆரத்தழுவி
வெற்றிடம் நோக்கி
காற்றின் திசைகள்.
முள்முனைக் காற்று
குத்தி விடாது... காற்று.. காற்று தான்.
முள் சூழ்ந்த பூக்கள் மணம், நிறம் மறக்காது.
பூக்கள்...
பூக்கள் தான்.
ஆம்...
அசைபோடச்
சொல்லும்
பயணங்கள்.
அனுபவங்களை அசைபோடுவோம். ஆளுமையை வளர்ப்போம்.
இந்த நாள் நமக்காக.
Comments
Post a Comment