Posts

Showing posts from July, 2022

where are you?

[19/07, 8:05 AM]   காலை வணக்கம் இறைவா! நா சுழன்று  உதடுகள் குவித்து வாய்பிறக்கும்  வார்த்தைகள் நல்லவையாய் இருந்துவிட்டால்  எத்தனை சுகமாய் இருக்கும்! நற்சிந்தனை எனக்குத்தா!!  நாளெல்லாம் உன்னைப் போற்றிட வரம் எனக்குத்தா!  இந்த நாள் நமக்காக. .................... [21/07, 8:56 AM]   காலை வணக்கம். பிறர் தூற்றுவார் என்பதற்காக உன் வாழ்வின் சிந்தனையை மாற்றிக் கொள்ளாதே. உனக்கு சரி எனத் தென்படுவதை ஆழமாக உணர்ந்த பிறகு  தொடர்ந்து அதில் பயணிக்க முயற்சி செய்.  இந்த நாள் நமக்காக. .............. [22/07, 7:33 AM]   காலை வணக்கம். உன்னை அளவு கடந்து உயர்த்திப் பேசுபவர்களின் உதடுகளை உற்றுப்பார்... வஞ்சகத்தின் வசீகரம் ஆங்கு மெல்லினமாய் பிறக்கும்... தந்திரம்  சிறுவிரல் பிடித்து நடைபோடும்... ஆம்...என்றும் எல்லை கடந்து புகழாதே! புகழவும் அனுமதியாதே! இந்த நாள் நமக்காக. ................ [23/07, 9:22 AM]  காலை வணக்கம்  காய்ந்த சருகுகளும் காற்றுக்கு சலசலத்து பதில் சொல்லும். மற்றோருக்குப் பதில் சொல்வது  நம்மை மதிப்பதாகும்.  இந்த ந...

பெருமை

காலை வணக்கம் வெற்றிகளை நினைத்து பெருமிதம்  கொள்வதை விட சவால்களை சந்தித்த விதங்களையும் நேரங்களையும் நினைத்து பார்த்து பெருமைப்படுவது இன்னும் அதிக மகிழ்ச்சி தரும்.  இந்த நாள் நமக்காக.

உள்ளுக

காலை வணக்கம்  உள்ளுக உயர்வாக இல்லையெனில் அழிவு காலடியில். இந்த நாள் நமக்காக.

அசை போடுவோம்

காலை வணக்கம்.  கல்லோ... முள்ளோ...  மனம் நினைக்கும் திசையில்  பாதங்களின் பயணம். இளஞ்செடியோ... பெரு மரமோ... ஆரத்தழுவி  வெற்றிடம் நோக்கி  காற்றின் திசைகள். முள்முனைக் காற்று  குத்தி விடாது... காற்று.. காற்று தான். முள் சூழ்ந்த பூக்கள் மணம், நிறம் மறக்காது. பூக்கள்... பூக்கள் தான். ஆம்...  அசைபோடச் சொல்லும் பயணங்கள். அனுபவங்களை அசைபோடுவோம். ஆளுமையை வளர்ப்போம். இந்த நாள் நமக்காக.

ஆசைப்படு

காலை வணக்கம்  தேவையானவற்றுக்கு ஆசைப்படு. ஆசைப்பட்டதை எல்லாம் தேவையாக மாற்றாதே.  இந்த நாள் நமக்காக.

முயற்சி

காலை வணக்கம்  அடி எடுத்து  வைத்த பின்  ஆலோசனை செய்யாதே... முயற்சிக்கு மெருகூட்டு...  சவால்களைச் சிந்திக்க தோள்களுக்கும் மனதிற்கும் வலுவூட்டு...  நிச்சயமாய் வெற்றி உனதாகும். இந்த நாள் நமக்காக