where are you?
[19/07, 8:05 AM]
காலை வணக்கம்
இறைவா!
நா சுழன்று
உதடுகள் குவித்து வாய்பிறக்கும் வார்த்தைகள்
நல்லவையாய் இருந்துவிட்டால்
எத்தனை சுகமாய் இருக்கும்!
நற்சிந்தனை எனக்குத்தா!! நாளெல்லாம் உன்னைப் போற்றிட வரம் எனக்குத்தா!
இந்த நாள் நமக்காக.
....................
[21/07, 8:56 AM]
காலை வணக்கம்.
பிறர் தூற்றுவார் என்பதற்காக உன் வாழ்வின் சிந்தனையை மாற்றிக் கொள்ளாதே.
உனக்கு சரி எனத் தென்படுவதை ஆழமாக உணர்ந்த பிறகு
தொடர்ந்து அதில் பயணிக்க முயற்சி செய்.
இந்த நாள் நமக்காக.
..............
[22/07, 7:33 AM]
காலை வணக்கம்.
உன்னை அளவு கடந்து உயர்த்திப்
பேசுபவர்களின் உதடுகளை உற்றுப்பார்...
வஞ்சகத்தின்
வசீகரம் ஆங்கு
மெல்லினமாய்
பிறக்கும்...
தந்திரம்
சிறுவிரல் பிடித்து நடைபோடும்...
ஆம்...என்றும் எல்லை கடந்து
புகழாதே!
புகழவும் அனுமதியாதே!
இந்த நாள் நமக்காக.
................
[23/07, 9:22 AM]
காலை வணக்கம்
காய்ந்த சருகுகளும் காற்றுக்கு சலசலத்து பதில் சொல்லும்.
மற்றோருக்குப் பதில் சொல்வது
நம்மை மதிப்பதாகும்.
இந்த நாள் நமக்காக.
Comments
Post a Comment