ஒன்றிணைவோம்
காலை வணக்கம்.
விதையின் வலி விருட்சம்.
தாயின் வலி சேய்.
உழவனின் வலி உணவு.
ஒருவரின் வலி மற்றவருக்கு வாழ்வு.
நீயின்றி நானில்லை.
நான் தனித்திருக்க
உரிமையில்லை.
தேனடையின் ஈக்களாக
ஆலமரத்து
பறவைகளாக
வேம்புகளின்
பூக்களாக
ஒட்டிக்கொள்வோம்.
இந்த நாள்
நமக்காக.
Comments
Post a Comment