இன்னலும் இன்பமும்
காலை வணக்கம்.
ஒரு காற்றுக்கு சாய்ந்தால்
மறு காற்றுக்கு நிமிர்ந்து நிற்கும் அந்த நாணல்...
ஒரு நேரத்தில்
காய்ந்த புல்
மறுமழைக்கு பசுமை போர்த்தி நிற்கும்...
பறக்கும் நாளெல்லாம்
இரை கொடுக்கும் திசையாக பறவைக்கு என்றுமே இருந்ததில்லை..
குனிந்து நிமிர்ந்த குழந்தை தான் கனிந்து வளர்ந்து வாழ்வு பெறும்...
ஆம்... காலச்சக்கரத்தின் சுழற்சியில்
இன்னலும் இன்பமும்
பின்னியே
கிடக்கும்...
இன்று இல்லையெனில் நாளை நிச்சயமாய் விடியல் வரும்...
நம்பிக்கையோடு நடப்போம்...
இந்த நாள் நமக்காக.
Comments
Post a Comment