யாரும் யாருக்கும் சிறியோர் அல்ல
காலை வணக்கம்
ஆழிப்பேரலையின்
அகங்கார இரைச்சலுக்கு முன்
கூடிக் குதுகலிக்கும் குழந்தையின்
கும்மாளம்
ஒரு பொக்கிஷமே.
பெரு வானப் பரப்பில் நீள் சிறகு விரித்து உச்சத்தில் பறக்கும் கழுகுகளை விட
கைச் சிறகு விரித்து
வான் அளக்க விரும்பும்
சிட்டுக்குருவியே
சீதனமாய்
வரவேண்டும்.
யாரும் யாருக்கும்
சிறியோர் அல்ல...
அவரவரின் ஆளுமை
அங்கீகரிக்கப்பட
வேண்டும்.
இந்த நாள் நமக்காக.
Comments
Post a Comment