சிதறல்கள்

[05/08, 6:44 AM
 காலை வணக்கம்.

 உன்னைப்பற்றி பிறர் சொல்லுவதை விட 
நீ உன்னை பற்றி என்ன நினைக்கிறாய் என்பதுதான் 
உன் வாழ்வுக்கு வழி சொல்லும்.

இந்த நாள் நமக்காக.


[06/08, 6:09 AM] 

 காலை வணக்கம். 

நம்மைப் புரிந்து கொள்ளாதவர்களை நாம் 
புரிந்து கொண்டால் நமது வாழ்வை 
நாம் புரிந்து கொண்டோம் என்பது பொருளாகும்.

 இந்த நாள் நமக்காக.
[07/08, 7:38 AM] Alex Bsnl: காலை வணக்கம்

புரியாமல் கிடப்பது மட்டும் புதிர் அல்ல...! புரிந்தும் புரியாதது போல் நடப்பதும் புதிர் தான்!

ஓய்வு நாள் வாழ்த்துக்கள்.

[08/08, 5:38 AM] 
 காலை வணக்கம்.

அன்பின் அதிர்வுகள் செவி மடல்களை எட்டா விட்டாலும் மெய்யை தொட்டுவிடும்.

நிச்சயமாய் எங்கோ ஒரு அன்பின் அதிர்வு 
உனக்காகப் புறப்படும்...காத்திரு.

இந்த நாள் நமக்காக.


[09/08, 9:55 AM]
 காலை வணக்கம் 

சாரல் தரும் சந்தோஷம் அனுபவித்தால் தான் தெரியும்

சின்ன சின்ன உரையாடல்களை அசை போட்டால் தான்   
அன்பின் ஆழம் புரியும்.

இந்த நாள் நமக்காக.


[10/08, 9:03 AM]
 காலை வணக்கம்.

உனக்கு முன் வருபவர் எந்நிலையில் இருந்தாலும் உன்னால் முடிந்ததை செய்.

ஆனால் அது உண்மையானதாக இருக்கட்டும்.

அது மறு உலக வாழ்விற்கு புண்ணியத்தைச் சேர்க்கும்.

இந்த நாள் நமக்காக


[12/08, 4:36 AM] 
 காலை வணக்கம் 

உலகம் சொல்லுகிறது என நம்பிவிடாதே!
அதன் குரலுக்கு உரிமையாளர் யார்?

ஆனால் உன் உள்மனக் குரலுக்கு
உரிமையாளர் 
உன்னைப்
படைத்தவன் தான்...
நம்பிக்கை கொள்.

இந்த நாள் நமக்காக.

Comments