Posts

Showing posts from December, 2021

Judging with Wisdom

காலை வணக்கம். கொடுத்தால் விண்ணைப் பிளக்கும் கோஷத்தில் உன் பெயர் இருக்கும்.  மறுத்தால் பழித்திடும் வார்த்தைகளில் உன் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படும்.  கவலைப்படாதே.  ஞானத்தோடு உன்னை மதிப்பீடு செய்பவர்களை அடையாளம் கண்டு கொள்.  அதுவே வாழ்வின் பயணத்திற்கு அடிநாதம்.  இன்றைய நாள் இனிய நாள்.

Responsible Person

Gd Mng Each one is called to play a role in the society.  Where am I? What am I doing? For whom?  Am I to circle around the my family or reach out for others? Wishing you a great day.  காலை வணக்கம். சிறு வட்டத்தில் சுற்றும்  செக்கு மாடுகளாக இருந்தாலும் சரி...  பெரு வான்வெளியில் பறந்து வரும் கழுகுகளாக இருந்தாலும் சரி....  இரண்டிற்குமே ஒரு குறிக்கோள் இருக்கிறது.  இப்பிரபஞ்சத்தில் பிறந்து வாழும் எனக்கு என்ன குறிக்கோள்? இம்மானுடத்தில் எனக்கென்று ஒரு பங்கு இருக்கிறது... செயல்படத் தயாரா? இந்த நாள் இனிய நாள்.

Individual Conversion

 காலை வணக்கம். இதுதான்  இறைவன் படைத்த மானுடமா? கேள்விகள் எழுகின்றன. எங்கு திரும்பினாலும் சப்தங்கள், ஓலங்கள்,  அடாவடித்தனம், அழுகுரல்.... ஓய்ந்து விடாதா?  என்ற ஏக்கம்... நிச்சயம் முடியும்...  ஒவ்வொருவரும் உள் மனக்குரலுக்கு செவிமடுத்தால்!!!! நிமிர்ந்து நிற்பதும் மெய்மை போற்றுவதும் இன்றைய மானுடத்தின் தேவை. எழுவோமா?? இன்றைய நாள் இனிய நாள். Is this the world God created? Questions arises When we look at those unjust and merciless acts. Will there not be an end? Yes ..it is possible only when the individuals listen to inner voice of each person. Come..let us stand up for truth and love and make a new world. Good Day.