Gd Mng...Anybody including children can be a witness to the love of God at any moment; it is precisely through our simple words and little deeds.... Another day given to us to recognize those lovely moments.
காலை வணக்கம் தானாக சிந்தித்தால் பெருமை அடுத்தவர் சொல்லி சிந்தித்தால் அருமை சிந்திக்கவே மறுத்தால் அது சிறுமை இந்த நாள் நமக்காக. காலை வணக்கம். மற்றவரின் விமர்சனங்களுக்குப் பயந்து உன் தோள்களின் வலிமைக்கு அப்பாற்பட்ட சுமைகளைத் தாங்குவதற்கு 'ஆம்' என்று சொல்லி விடாதே! அது உன் ஆளுமையை முடக்கிவிடும்! உன் முடிவை நீயே எடுத்து தைரியமாகச் சொல்லிவிடு! இந்த நாள் நமக்காக
காலை வணக்கம் அசைபோடுதல் நமக்குள் நல்லது தான்... ஆனால் மற்றவரிடத்தில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் யாருக்கு பலன்? சற்று புதினமாய் சிந்திக்கலாமே! இந்த நாள் நமக்காக
[19/07, 8:05 AM] காலை வணக்கம் இறைவா! நா சுழன்று உதடுகள் குவித்து வாய்பிறக்கும் வார்த்தைகள் நல்லவையாய் இருந்துவிட்டால் எத்தனை சுகமாய் இருக்கும்! நற்சிந்தனை எனக்குத்தா!! நாளெல்லாம் உன்னைப் போற்றிட வரம் எனக்குத்தா! இந்த நாள் நமக்காக. .................... [21/07, 8:56 AM] காலை வணக்கம். பிறர் தூற்றுவார் என்பதற்காக உன் வாழ்வின் சிந்தனையை மாற்றிக் கொள்ளாதே. உனக்கு சரி எனத் தென்படுவதை ஆழமாக உணர்ந்த பிறகு தொடர்ந்து அதில் பயணிக்க முயற்சி செய். இந்த நாள் நமக்காக. .............. [22/07, 7:33 AM] காலை வணக்கம். உன்னை அளவு கடந்து உயர்த்திப் பேசுபவர்களின் உதடுகளை உற்றுப்பார்... வஞ்சகத்தின் வசீகரம் ஆங்கு மெல்லினமாய் பிறக்கும்... தந்திரம் சிறுவிரல் பிடித்து நடைபோடும்... ஆம்...என்றும் எல்லை கடந்து புகழாதே! புகழவும் அனுமதியாதே! இந்த நாள் நமக்காக. ................ [23/07, 9:22 AM] காலை வணக்கம் காய்ந்த சருகுகளும் காற்றுக்கு சலசலத்து பதில் சொல்லும். மற்றோருக்குப் பதில் சொல்வது நம்மை மதிப்பதாகும். இந்த ந...
Comments
Post a Comment