Gd Mng...Doubts arise in our minds due to prejudices but God offers the opportunities to clarify the same. Openness to see the truth will pave the way for right judgements...Blessed Tuesday
காலை வணக்கம் அசைபோடுதல் நமக்குள் நல்லது தான்... ஆனால் மற்றவரிடத்தில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் யாருக்கு பலன்? சற்று புதினமாய் சிந்திக்கலாமே! இந்த நாள் நமக்காக
காலை வணக்கம் தானாக சிந்தித்தால் பெருமை அடுத்தவர் சொல்லி சிந்தித்தால் அருமை சிந்திக்கவே மறுத்தால் அது சிறுமை இந்த நாள் நமக்காக. காலை வணக்கம். மற்றவரின் விமர்சனங்களுக்குப் பயந்து உன் தோள்களின் வலிமைக்கு அப்பாற்பட்ட சுமைகளைத் தாங்குவதற்கு 'ஆம்' என்று சொல்லி விடாதே! அது உன் ஆளுமையை முடக்கிவிடும்! உன் முடிவை நீயே எடுத்து தைரியமாகச் சொல்லிவிடு! இந்த நாள் நமக்காக
காலை வணக்கம் வெற்றிகளை நினைத்து பெருமிதம் கொள்வதை விட சவால்களை சந்தித்த விதங்களையும் நேரங்களையும் நினைத்து பார்த்து பெருமைப்படுவது இன்னும் அதிக மகிழ்ச்சி தரும். இந்த நாள் நமக்காக.
Comments
Post a Comment